சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மக்களின் ஒத்துழைப்பு தேவை என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் எனவும், மாநிலம் முழுவதும் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று சட்டசபையில் பழனிசாமி பேசியதாவது: கொரோனா விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம். ஒவ்வொரு உயிரும் முக்கியம். மாலை 6 மணியுடன் மாவட்ட எல்லைகள் மூடப்படுவதால், அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
மக்களின் ஒத்துழைப்பு தேவை: முதல்வர் வேண்டுகோள்